இந்திய குடியரசு தின விழாவுக்கு டிரம்ப் வரமாட்டார் : வெள்ளை மாளிகை
வாஷிங்டன்
இந்திய குடியரசு தின விழாவில் பங்கு கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் வர மாட்டார் என வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
வரும் 2019ஆம் ஆண்டு ஜனவர் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க டிரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் உறுதி செய்தார். இந்தியாவில் இருண்டு முறைப்படி விடுக்கப்பட்ட அழைப்பை தாம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஈரான் எண்ண்ய் வர்த்தகம், ரஷ்ய அணு ஆயுத ஒப்பந்தம் ஆகியவை குறித்து கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால் டிரம்ப் இந்தியா வர மறுப்பு தெரிவித்து விட்டதாக செய்திகள் பரவின. அதை இந்திய அரசு மறுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என இந்தியா தெரிவித்தது.
இன்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வரும் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழாவுக்கு வருகை தரும்படி இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அன்று அதிபர் டிரம்புக்கு அமெரிக்காவில் பல நிகழ்வுகள் உள்ளன. அதிலும் அதே தினத்தன்று அமெரிக்க இரு அவைகளின் செனட்டர் கூட்டம் நடைபெறுகிறது. அதில் டிரம்ப் உரையாற்றுகிறார்.
இந்தியாவின் அழைப்பை அதிபர் நிராகரித்துள்ளதாக வந்த தகவலகள் தவறானவை. இந்தியாவின் மீது டிரம்ப் மிகவும் மதிப்பு வைத்துள்ளார். பிரதமர் மோடியுடன் அவர் மிகுந்த நட்புடன் உள்ளார். இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது” என தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு வர மாட்டார் என்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.