வாஷிங்டன்:

மெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்பு ரத்தான நிலையில், மீண்டும் இருவரையும் சந்திக்க வைக்க தென்கொரிய அதிபர் முயற்சி மேற்கொண்டு வந்தார்.

இதன் காரணமாக  ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 12ந்தேதி சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக வடகொரி அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, பேச்சு வார்த்தை குறித்து ஆலேசானை நடத்த  அமெரிக்க அதிகாரிகள் வடகொரியா விரைந்துள்ள னர்.

வடகொரியா, தென்கொரிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த பல ஆண்டு பகை, சமீபத்தில் தென் கொரியாவில்  நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவை சேர்ந்த வீரர்கள் பங்குபெற்றது இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை உருவாக காரணமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 27ந்தேதி  வடகொரிய அதிபர் தென்கொரிய அதிபர் இருவரும் சந்தித்து பேசினர். இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக வர்ணிக்கப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேச்சு நடத்த தயார் என்று வடகொரிய அதிபர் கிம்  அறிவித்தார்.  அதற்காக தனது அணுஆயுத சோதனை நிலையங்களை அழித்து வடகொரி அதிபர் தனது இணக்க மான நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தார்.

‘அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர், வடகொரியஅதிபர் சந்திப்பு உறுதியானது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 12ந்தேதி வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், அமெரிக்கா ஒருதலைபட்சமாக  நடந்தால், அமெரிக்கா- வட கொரியா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டபோதிலும், இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் கீ-க்வான் கூறியதாக  தகவல் வெளியானது. இது வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறிய கதையாக கூறப்பட்டது. அதன் காரணமாக டிரம்ப் வட கொரிய அதிபருடனான சந்திப்பை  ரத்து செய்தார்.

இதையடுத்து அமெரிக்க மற்றும் தென்கொரிய நாடுகளின் உயர்மட்ட தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திட்டமிட்டப்படி சந்திப்பை நடத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியஅதிபர். கிம் ஜாங் உன்னை  திட்டமிட்ட தேதியில் சந்தித்து பேசுவதாக தெரிவிக்கப்பட்டது.

டிரம்ப் தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில்,  “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ந்தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது” என்று கூறி இருந்தார்.

எனவே, டிரம்ப்- கிம் ஜாங் உன் சந்திப்பு திட்டமிட்டவாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.