குழந்தைகளை பிரிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிரம்ப்?

வாஷிங்டன்

மெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளை பிரிக்கும் நடவடிக்கைக்கு டிரம்ப் முற்றுப்புள்ளி வைக்கலாம் என தகவல் வந்துள்ளது

உலகெங்கும் சட்ட விரோதமாக குடியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் மீது அதிபர் டிரம்ப் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.  அதன் படி சட்டவிரோதமாக குடும்பத்துடன் நுழைபவர்கள் தனித் தனியாக பிரிக்கப்படுகின்றனர்.   பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.   குழந்தைகள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப் படுகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  அதிபர் டிரம்ப் மனைவி மற்றும் முன்னாள் அதிபர் புஷ்ஷின் மனைவி ஆகியோர் எதிர்த்து அறிக்கை அளித்துள்ள்னர்.    இந்நிலையில் அமெரிக்க ஊடகமான ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பதிந்துள்ளார்.

அந்த செய்தியில் “சட்டவிரோதமாக நாட்டுக்குள் புகும் பெற்றோர்களுடன் குழந்தைகள் சேர்ந்து வாழ வழி வகுக்க சட்டத்தை மாற்ற டிரம்ப் உத்தேசித்துள்ளார்.   இது குறித்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  அதை ஒட்டி டிரம்ப் மாறுதல்கள் செய்வார்” என பதியப்பட்டுள்ளது.

You may have missed