வாஷிங்டன்

மெரிக்க அதிபர் தேர்தலுக்கான காணொளி விவாதத்தில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது.   அதிபர் வேட்பாளர்களான தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர்  மூன்று கட்ட விவாதத்தில் கலந்து கொள்ள இருந்தனர்.  முதல் கட்டம் முடிவடைந்த நிலையில் அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

டிரம்பிடம் இருந்து கொரோனா தொற்று உண்டாக வாய்ப்பு உள்ளதாக வந்த செய்திகளை அடுத்து ஜோ பிடன் விவாதத்தில் கலந்து கொள்ள மறுத்தார்.  அதையொட்டி  அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அன்று மியாமியில் நடைபெற இருந்த இரண்டாம் கட்ட விவாதம் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது தனது எதிரி வேட்பாளருக்கு நன்மை தரும் என்பதால் தாம் கலந்து கொள்வதாக அதிபர் டிரம்ப் முதலில் தெரிவித்தார்.  ஆனால் இன்று ஃபாக்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப், “நான் எனது நேரத்தை நேரடி விவாதத்தின் மூலம் வீணடிக்க விரும்பவில்லை.   கணினிக்கு முன்பு அமர்ந்து பேசுவது அபத்தமான ஒன்றாகும்..  எனவே நான் காணொளி விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.