அமெரிக்க தொலைக்காட்சி சங்கத்திலிருந்து ட்ரம்ப் ராஜினாமா

வாஷிங்டன்:

மெரிக்காவின் தொலைக்காட்சி சங்கத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்களின் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொழுது போக்கு துறையின் முன்னணி தொழிலாளர் சங்கம் அவரை தகுதி நீக்கம் செய்யப் போவதாக தெரிவித்ததால் டொனால்ட் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏறக்குறைய 1,60,000 திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள், வானொலி பிரமுகர்கள், பதிவு செய்யும் கலைஞர்கள், பாடகர்கள் ஃபேஷன் மாடல்கள் மற்றும் பிற ஊடக வல்லுனர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் SAG-AFTRA வுக்கு தான்.  அனுப்பிய கடிதத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த தாவது:


நான் இனி உங்கள் தொழிற்சங்கதுடன் இணைந்திருக்க விரும்பவில்லை, நீங்கள் எனக்காக எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை, ஆனால் நான் தொலைக்காட்சி வணிகத்திற்கு பெரிதும் உதவி செய்திருக்கிறேன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளேன், ஆனால் இந்த தொழிற்சங்கம் உறுப்பினர்களுக்கு எதுவும் செய்யவில்லை, ஆகவே இக்கடிதம் நான் SAG-AFTRA விலிருந்து உடனடியாக ராஜினாமா செய்வதை தெரிவிப்பதாகும், என அக்கடிதத்தில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.