வாஷிங்டன் :
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வாஷிங்டன் அருகே உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் ட்ரம்ப், மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த தனது ஆதரவாளர்களை காரில் பயணித்து நேரில் சென்று பார்த்தார். கை அசைத்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ பதிவில் ‘’ சாலையில் குழுமி இருந்த தேச பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதற்காக அவர்களை நேரில் சந்தித்தேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில் ‘’ இது (மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது) சுவாரஸ்யமான பயணம். கொரோனா குறித்து பாடம் கற்றுக்கொண்டேன். இது தான் உண்மையான பள்ளிக்கூடம். பாடங்கள் ஏதும் படிக்காமல் , கற்றுக்கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளதால் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-பா.பாரதி.