வாஷிங்டன்

சிரியா புதிய ரசாயன தாக்குதலுக்கு திட்டம் தீட்டினல் அமெரிக்க மீண்டும் அந்நாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

சிரியா நாட்டில் ரசாயன தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் 70க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.   இந்த தாக்குதலுக்கு சிரியா அரசுப் படைகளே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.    சிரியாவின் ரசாயன ஆயுதங்களை ஒழிக்க தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்த அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாட்டுடன் இணைந்து சிரியா படைகள் மீது தாக்குதல் நடத்தியது.

சிரியா தனது ரசாயன ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ள டாமஸ்கஸ் உள்பட மூன்று இடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றது     நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகளைகளை வீசி போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் மூலம் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.   இதை அமெரிக்காவின் பெண்டகன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  தனது டிவிட்டர் பக்கத்தில், “மிகத் துல்லியமாக நடந்த இந்த தாக்குதலுக்கு எனது பாராட்டுக்கள்.   இந்த தாக்குதலுக்கு உதவிய பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு எனது நன்றிகள்.    மேலும் புதிய ரசாயன தாக்குதலுக்கு சிரியா திட்டமிட்டால் மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தப்படும்”  என பதிந்துள்ளார்.

இந்த தாக்குதலால் சிரியவும் ரஷ்யாவும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளன.   ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “ரசாயன தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை இன்னும் முடிவடையவில்லை.  அதற்குள் அமெரிக்கா அவசரப்பட்டு தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது”  எனத் தெரிவித்துள்ளார்.