வாஷிங்டன்: வெறும் 4 ஆண்டு பதவி காலத்துடன் தான் ஓய்ந்துவிடப் போவதில்லை என்றும், அடுத்த 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடலாம் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

அதிபர் தேர்தலில் டிரம்ப்பை வீழ்த்தி, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வீழ்த்தியிருந்தாலும், அதை டிரம்ப் தரப்பு இன்னும் முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை. பல மாகாணங்களின் முடிவுகளை எதிர்த்து டிரம்ப் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வழக்குகளின் மூலம் டிரம்ப் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கே நம்பிக்கை அகன்று கொண்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் பேசிய டிரம்ப், “நான் இந்தப் போரில் தோற்றிருக்கலாம். ஆனால், அதற்காக அப்படியே அமைதியாக இருந்துவிட மாட்டேன். ஒருமுறை அதிபராக மட்டுமே திருப்தியடைந்துவிட மாட்டேன்.

கடந்த 4 ஆண்டுகள் அற்புதமானதாக இருந்தது. நாங்கள், அடுத்த 4 ஆண்டுகள் தொடர்வதற்கு முயன்று கொண்டுள்ளோம். அப்படியில்லை என்றால், அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து உங்களை சந்திக்கிறேன்” என்றுள்ளார்.