நியூயார்க்:

ஈரானில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 1,500 அமெரிக்க துருப்புகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.


ஜப்பான் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பிய ட்ரம்ப், ஈரானில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட பதற்றத்தையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1,500 அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

மிகக் குறைந்த அளவிலான துருப்புகள் என்றாலும், அனைவரும் அதீத திறமைவாய்ந்தவர்கள்.
இந்த மாத தொடக்கத்தில் அதிரடிப் படை, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தும் வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பியது.

ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், இந்த படைகளை அனுப்புவதாக அமெரிக்கா கூறியிருந்தது.
2015-ம் ஆண்டு செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் மீறுவதாகக் கூறி அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், திங்களன்று அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தினால் பெரும் படையை ஈரான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.