அணு ஆயுதத்தை கைவிட்டால் மட்டுமே  அதிபர் பதவி : வட கொரிய அதிபருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

--

வாஷிங்டன்

ட கொரிய அதிபர் அணு ஆயுதங்களை கை விட்டால் மட்டுமே அதிபர் பதவியில் நீடிக்க முடியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரும் ஜுன் மாதம் வடகொரிய அதிபரும் அமெரிக்க அதிபரும் சிங்கப்பூரில் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.   இந்நிலையில் தென் கொரியாவுடன் அமெரிக்கா ராணுவ சோதனைகள் நடத்தியதால் வட கொரியா அதிருப்தி அடைந்துள்ளது.   அத்துடன் அமெரிக்க அதிபருடனான சந்திப்பையும் ரத்து செய்வதாக மிரட்டலும் விடுத்தது.

நேற்று ஐநா சபையின் நேட்டோ நாடுகள் காரியதரிசி  ஜென்ஸ் உடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.  சந்திப்புக்குப் பின் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ட்ரம்ப், “வடகொரிய அதிபர் தனது அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே அவரால் அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.    அவ்வாறு அவர் கை விடும்போது அவருக்கு உயர்ந்த பட்ச பாதுகாப்பு அளிக்கப்படும்.   அவர் தனது நாட்டில் சௌகரியமாக ஆட்சி புரியலாம்.   அவரது நாடும் பணக்கார நாடாகும்” என தெரிவித்துள்ளார்.