இந்தியாவில் நடைபெற்ற தாக்குதலில் ஈரான் காசிம் சுலைமானிக்கு தொடர்பு! கோர்த்து விட்ட டிரம்ப்

வாஷிங்டன்:

ந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானிக்கும் தொடர்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதற்கு இந்தியாவுக்கான ஈரான் தூதரர்  தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கப் படைகள் டிரான் மூலம் ஈரானில் நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளாக இங்கிலாந்து உள்பட பல நாடுகள் அதிருப்தி தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்து உள்ளார். புளோரிடா மாகாணம், மார்  லாகோ விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,

ஈராக் தலைநக்ர பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வன்முறை தாக்குதல் நடந்தது இதற்கு  சுலைமானி தான் காரணம் என்று கூறியவர்,  சுலைமானி, ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்தார் என்றும்,. இந்தியாவின் டெல்லி, லண்டன் உள்பட உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் சதியிலும் சுலைமானிக்கு பங்கு உண்டு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், சுலைமானி பலியான இன்றைய தினத்தில், அவரது அட்டூழியங்களால் கொல்லப்பட்டவர்களை நினைக்க வேண்டும்,  அவரது பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டது என்பதை அறிந்து நிம்மதி பிறந்துள்ளது என்றார். சுலைமானி மீதான இந்த தாக்குதல்  நீண்ட காலத்துக்கு முன்பே நடத்தி இருந்தால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றவர், ஈரானில் அரசுக்கு எதிராக போராடிய மக்கள் சித்ரவதை செய்து கொல்லப் பட்டது தவிர்க்கப்பட்டிருக்கும், இதுபோன்ற நடவடிக்கையை தடுக்கத்தான் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என்று தாக்குதலுக்கு நியாயம் கற்பித்து உள்ளார்.

ஈரான் மக்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் வளமான பாரம்பரியமும், கட்டுக்கடங்காத ஆற்றலும் கொண்டவர்கள். நாங்கள் அங்கு ஆட்சி மாற்றத்தை நாட வில்லை என்றும், இது போரை உருவாக்கு வதற்கான தாக்குதல் அல்ல; அதனை நிறுத்துவதற்கான தாக்குதல் என்றும் தனது நியாயத்தை வலியுறுத்தினார்.

இதற்கிடையில் டெல்லியில் நடந்த தாக்குதலில் சுலைமானிக்கு தொடர்பில்லை என இந்தியாவுக்கு ஈரான் தூதர் மறுத்துள்ளார்.

தலைநகர்  டெல்லியில் 2012ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி இஸ்ரேல் தூதரக அதிகாரியின் மனைவி சென்ற காரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுலைமானிக்கு தொடர்பு இருந்தாக டிரம்ப் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.