இந்தியாவுடனான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்; ஆனால் நிறைவேறுவதில் தாமதம்? டிரம்ப்

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஆனால்,  இந்த ஒப்பந்தம், அவர் பதவிக்காலத்தில் நிறைவேற்றப்படுவது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

வரும் 24-ம் தேதி தனது மனைவி மெலவானவுடன் இந்தியாவுக்க வருகை தரும் டிரம்ப் டெல்லி, அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்கிறார்.  அகமதாபாத் வரும் டிரம்ப் தம்பதிகளுக்கு ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற பெயரில், விமான நிலை யத்திலிருந்து மோட்டேரா ஸ்டேடியம் வரை மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது.   பின்னர், அந்த ஸ்டேடியத்தில் டிரம்ப்புடன் பிரதமர் மோடியும் கலந்து கொள்ளும் ஹவ்டி டிரம்ப் என்ற  பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் முன்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இதே போல், அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் ஹவ்டி மோடி என்ற தலைப்பில் பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுபோல நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அகமதாபாத்தில் 24ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை முடித்த பின் டிரம்ப், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் செல்கிறார். பின்னர் அவர் 25ம் தேதி டெல்லி செல்லும் அவருக்கு ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடங்குகிறது.

இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,  கடந்த 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 23.2 பில்லியன் டாலர் பொருட்கள் வர்த்தக பற்றாக்குறை இருந்தது, இது பொருட்கள் தொடர்பாக  9 வது மிகப்பெரிய வர்த்தக பங்காளியான  இந்தியா வால்  நாங்கள் நன்றாக நடத்தப்படவில்லை, ஆனால் நான் பிரதமர் மோடியை மிகவும் விரும்புகிறேன். வர் என்னிடம், விமான நிலையத்திலிருந்து மோட்டேரா ஸ்டேடியம் வரை எனக்கு அளிக்கப்படும் வரவேற்பில் 70 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று சொன்னார். அந்த நிகழ்ச்சி மிகவும் ஆரவாரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்… என்று  “ஹலோ டிரம்ப்” பேரணி குறித்தும் குறிப்பிட்டார்.

அதுபோல இந்திய அரசுடன் நடத்தப்படும் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், ஆனால், அதற்கு  நேரம் எடுக்கும் என்றும் டிரம்ப் கோடிட்டு காட்டி உள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமான அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை உருவாக்கியுள்ளன, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின்போது, பால் பொருட்கள், இறைச்சி, மற்றும்   யு.எஸ். பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் (எல்எம்டி.என்) இரண்டு டஜன் இராணுவ ஹெலிகாப்டர்களுக்கு 2.6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு முறையான அனுமதி வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும்எ ன எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிரம்பின் அறிவிப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெறுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்தியாவுடன் அவர் கையெழுத்திடும் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது, அவர்களின் பொருட்கள் மற்றும் சேவை வர்த்தகம் 2018 இல் 142.6 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.