தேர்தல் நேரத்தில்  தனிமைப் படுத்திக்கொண்ட ட்ரம்ப் 

தேர்தல் நேரத்தில்  தனிமைப் படுத்திக்கொண்ட ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் கிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போதெல்லாம் கிக்ஸ், அதிபர்  .ட்ரம்ப்புடன் இருந்து வந்தவர்.

இதனால், டரப்ம்பும், அவர் மனைவி மெலனியாவும் , கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இன்னும் பரிசோதனை முடிவு வராத நிலையில், ட்ரம்பும், மெலினியாவும் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர்.

‘’ஓய்வே இல்லாமல் உழைப்பவர்களை எல்லாம் கொரோனா தொற்றிக்கொள்கிறது. நானும், நாட்டின் முதல் பெண்மணியும் ( மெலனியா) தனிமைப் படுத்திக் கொண்டுள்ளோம்’’ என ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப், இன்று தனது ஆதரவாளர்களை வாஷிங்டனில் சந்தித்து விட்டு, தேர்தல் பிரச்சாரத்துக்கு புளோரிடா செல்வதாக இருந்தது.

அந்த சுற்றுப்பயணத்தை, ட்ரம்ப் ரத்து செய்து விட்டார்.

வழக்கமாக ஒருவர் 14 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ட்ரம்ப் எத்தனை நாள் தனிமையில் இருக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.

 வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதுவே முதன் முறை.

– பா.பாரதி.