அமெரிக்க அரசின் செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் சாம்பியன் பட்டம் வென்ற கால்பந்து வீரர்களான கல்லூரி மாணவர்களுக்கு அதிபர் டிரம்ப் விருந்து அளித்துள்ளார். மெக்டொனால்ட்ஸ், பர்கர், வெண்டிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உணவுகள் டிரம்ப் அளித்த விருந்தில் இடம் பெற்றிருந்தன.

trump

யு.எஸ். காலேஜ் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் பட்டத்தை க்ளம்சன் டைகர்ஸ் என்ற அணி வென்றது. இதனை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற கல்லூரி மாணவர்களுக்கு விருந்து அளிக்க அதிபர் டிரம்ப் முடிவெடித்தார். அதன்படி வெள்ளைமாளிகளையில் நடைபெறும் விருந்தில் பங்கேற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.

அமெரிக்க அதிபர் அளிக்கும் இந்த விருந்தில் மெக் டொனால்ட்ஸ், பர்கர் கிங், வென்டிஸ் உள்ளிட்ட உணவகங்களில் இருந்து பீட்சா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை உள்ளிட்ட் ஃபாஸ்ட் புட் உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டன. விருந்து பரிமாறும் டேபிள் மீது மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பது முதல்
அதிபர் டிரம்ப் அருகில் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தார். அரசு முடங்கியுள்ள நிலையில் இதற்கான செலவை டிரம்பே ஏற்றார்.

மெக்சிகோ எல்லைப்பகுதியில் அந்நியர் ஊடுருவலை தடுக்க சுமார் 5.7பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சுவர் எழுப்ப வேண்டுமென பாரளுமன்றத்தில் கடந்த மாதம் டிரம்ப் கூறியிருந்தர். இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கவே டிரம்ப் தலைமையிலான ஜனநாயக கட்சி அரசின் வேலைகள் முடங்கின. ’கவர்ன்மென்ட் ஷட் டவுன்’ என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசு செயல்பாடுகள் முடக்கம் 24 நாட்களாக நீடித்து வரும் நிலையில் டிரம்ப் வெள்ளை மாளிகையில் கல்லூரி மாணவர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.