சர்ச்சைக்குரிய பாகுபலி மார்பிங் வீடியோவை பகிர்ந்து மகிழும் டிரம்ப்

வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை பற்றி மார்பிங் செய்யப்பட்டுள்ள பாகுபலி வீடியோவை டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியாவுக்கு வர உள்ளார்.  அவர் நாளை மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துக் கொள்ளும் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதன் பிறகு சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரமத்தை அவர் பார்வை இடுகிறார்.   ஒருவேளை நேரமின்மை காரணமாக அவர் அங்குச் செல்லவில்லை எனில் டில்லியில் உள்ள காந்தி ஆசிரமத்தை அவர் பார்வை இடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் இருந்து அன்றே கிளம்பி அவர் டில்லியில் பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.   செவ்வாய் அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்படும் வரவேற்பை அவர் ஏற்றுக் கொள்கிறார்.   அத்துடன் அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்தியத் தொழிலதிபர்கள் கூட்டத்தில் அவர் கலந்துக் கொள்ள உள்ளார்.  அன்று இரவு விருந்துக்குப் பிறகு டிரம்ப் வாஷிங்டன் திரும்புகிறார்,

அவர் வருகையையொட்டி டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தை மார்பிங் செய்யப்பட்டு வெளியான வீடியோ பிரபலமாகி வருகிறது.   அந்த வீடியோவில் பிரபாஸ் முகத்துக்குப் பதிலாக டிரம்ப் முகம் இணைக்கப்பட்டுள்ளது.   இந்த வீடியோவில் டிரம்ப் மனைவி, மகள் மற்றும் மகன் முகமும் உள்ளது.

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிந்து ”இந்தியாவில் உள்ள எனது மாபெரும் நண்பர்களை காண ஆவலாக உள்ளேன்” எனப் பதிந்துள்ளார்.   இந்த பாகுபலி வீடியோவில் மோடி மற்றும் அவர் மனைவியின் முகங்களும் இணைக்கப்பட்டுள்ளது.   அவர் மோடியின் மனைவி என்பது தெரியாமலே டிரம்ப் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மோடியின் மனைவி அவருடன் சேர்ந்து வாழவில்லை என்பதும் எந்த ஒரு நிகழ்விலும் இருவரும் சேர்ந்து கலந்துக் கொள்வதும் கிடையாது என்பதும் அனைவரும் அறிந்ததே.  அவ்வாறு இருக்க இந்த வீடியோவில் அவர் இடம் பெற்றுள்ளார் என்பது சர்ச்சையாகி உள்ளது.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ :

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: bahubali, donald trump, India visit, Morphing video, Patrikaidotcom, tamil news, US President, அமெரிக்க அதிப்ர், இந்தியா வருகை, டொனால்ட் டிரம்ப், பாகுபலி, மார்பிங் வீடியோ
-=-