அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்…. தென்கொரியா அதிபர் மூன்

சியோல்:

‘‘அணு ஆயுத நடவடிக்கைகளை வட கொரியா கைவிட முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’’ என்று தென் கொரியா அதிபர் மூன் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் மூத்த செயலாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் அதிபர் மூன் தலைமையில் நடந்தது. இதில் மூன் பேசுகையில், ‘‘நாங்கள் அமைதியை எதிர்பார்த்தோம். வட கொரியா அணு ஆயுத நடவடி க்கைகளை கைவிட முயற்சி செய்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 27ம் தேதி நடந்த மாநாட்டில் கொரிய நாடுகளிடையே சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது. இரு நா டுகளிடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்னைகளுக்கு இதன் மூலம் முடிவுகட்டப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக அடுத்த 3 அல்லது 4 வாரங்களில் அமெரிக்க அதிபர், வட கொரியா அதிபர் சந்திப்பு நட க்கவுள்ளது. முன்னதாக ஜனவரியில், கொரிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஏற்பட்டு சுமூக தீர்வு ஏற்பட்டால் இதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணமாக இருக்கும் என்று தென்கொரியா அதிபர் மூன் தெரிவித்திருந்தார்.

மறைந்த தென்கொரி அதிபர் கிம் டே ஜங்கின் மனைவி லீ ஷீ ஹோ கூறுகையில், ‘‘இரு நாடுகளின் பிர ச்னைகளுக்கு தீர்வு கண்ட அதிபர் மூனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்தே மூன், அமெரிக்க அதிபருக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி