வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு 44 ஆயிரம் ரூபாய் வழங்கும் கொரோனா நிவாரண மசோதா, சட்டமாகும் வகையில் தற்போதைய அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.  அந்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி உள்ளது.  பலியானவர்களின் எண்ணிக்கை 3.41 லட்சம் ஆகும்.

கொரோனா தொற்றை  இதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து மும்மரமாக நடந்து வருகிறது. இந் நிலையில், நாடாளுமன்றத்தில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்யும் கொரோனா நிவாரண மசோதா நிறைவேறியது.

ஆனால்  இந்த மசோதாவால் போதிய நிவாரண உதவி கிடைக்காது என்று கூறி மசோதாவை சட்டமாக்க டிரம்ப் கையெழுத்திட மறுத்து வந்தார். மேலும்,  மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்த நிவாரண நிதியான 2 ஆயிரம் டாலர் என்பதை (இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம்) அதிகரிக்கும்படியும் டிரம்ப் வலியுறுத்தினார்.

அதன் காரணமாக, கொரோனா நிவாரண மசோதா சட்டமாக ஆவதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர்  மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் கொரோனா நிவாரணம் மசோதா பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.