நிதி உதவி நிறுத்தம் : பாலஸ்தீனத்துக்கு அமெரிக்கா அதிரடி

வாஷிங்டன்

பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1400 கோடி நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.

ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் ஆகியோருக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் உள்ளது.   பாலஸ்தீனத்தின் காசா மற்றும் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் சூழலில் பாலஸ்தீன மக்கலில் பலர் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர்.   இவர்களுக்கு அமெரிக்கா இந்திய மதிப்பில் ரூ.1400 கோடி நிதி உதவி வழங்கி வருகிறது.

அந்த பகுதி மக்கலின் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல நிவாரணங்களுக்காக கடந்த 20 வருடங்களாக அமெரிக்கா இந்த நிதி உதவியை வழங்கி வருகிறது.    தற்போது திடீரென அதிபர் டிரம்ப் இந்த நிதி உதவியை நிறுத்த வேண்டும் என  அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.   இது அந்நாட்டு மக்களுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

கடந்த மே மாதம் அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற இருந்ததை பாலஸ்தீனம் எதிர்த்தது.   அதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா  பாலஸ்தீனத்தின் மீது பல நடவடிககைகள் எடுத்து வருகிறது.   முத்லில் ஐநா சபை பாலஸ்தீன அகதிகளுக்கு வழங்கிய நிதியை அமெரிக்கா நிறுத்தியது.   தற்போது போரில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் நிதியையும் நிறுத்தி விட்டது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Trump stopped financial aid to Palestine
-=-