வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்றம் டிரம்ப் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அதிபர் தேர்தலில்  தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய  அதிபர் டிரம்ப், வன்முறையை தூண்டு வகையில் வீடியோக்களை சமுக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள்  நாடாளுமன்றத்தை முறையிட்டு, நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரம் செய்தனர். நாடாளுமன்ற அலுவலகத்திற்குள் புந்தவர்கள், அங்குள்ள ஆவனங்களை கிழிந்து எறிந்து நாசப்படுத்தினர்.

வன்முறையை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.  அதில் ண் ஒருவர் உயிரிழந்தார். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமகா வாஷிங்டனில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டிரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்ற அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.