ஜியார்ஜியா: அதிபர் தேர்தலில், தான் தோற்க நேர்ந்தால், அமெரிக்காவை விட்டு வெளியேற நேரிடும் என்று அனுதாபம் கிளப்பியுள்ளார் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கொரோனா தாக்கம், பொருளாதார பாதிப்பு, இனவெறிக்கு எதிரானப் போராட்டம் உள்ளிட்ட பல்வ‍ேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார் டிரம்ப். அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளார்.
அவர், ஜியார்ஜியாவின் மகோனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசினார். அப்போது, நாட்டின் பிரச்சினையைவிட அதிகமாக தன்னைப் பற்றியே பேசினார் டிரம்ப்.
“நான் தோற்றால் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நான் அதை நல்லதாக உணர மாட்டேன். ஒருவேளை, நான் இந்த நாட்டைவிட்டே வெளியேற வேண்டியிருக்கலாம்.
என்னால் அதிக நிதியைத் திரட்ட முடியும். நான் உலகின் சிறந்த நிதிதிரட்டுநராக இருப்பேன். ஆனால், அதை நான் செய்ய விரும்பவில்லை. இந்ந நாட்டின் வரலாற்றில், பிறரைவிட நான் ஒரு சிறந்த அதிபராக(ஆப்ரகாம் லிங்கனைத் தவிர) இருக்க முடியும்” என்று பேசினார்.