வாஷிங்டன்:

மனைவிக்கு பிறந்தநாள் பரிசு வாங்குவதில் டிரம்ப் பரபரப்பாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியாவின் 48வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ‘ஃபாக்ஸ அண்டு பிரண்ட்ஸ்’ டிவி நிகழ்ச்சியில் டிரம்பிடம் தொலைபேசி மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது மனைவி பிறந்தநாளுக்கு என்ன பரிசு வாங்கியுள்ளீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘‘நான் இன்னும் வாங்கவில்லை. அதனால் பெரும் சிக்கல் ஏற்படலாம். அதை நான் பிறந்தநாள் அன்று வழங்குவேன். அது எனக்கு மிகப்பெரிய சிறப்பு நாள். அது தான் மெலனியாவின் பிறந்தநாள்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘அவருக்கு பரிசு வாங்குவதில் மும்முரமாக உள்ளேன். எனினும் தற்போது வரை சில வாழ்த்து அட்கைகள் மற்றம் பூக்களை வாங்கியுள்ளேன்’’என்று தெரிவித்துள்ளார். எனினும் மெலனியா தற்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான் மற்றும் பிரிகிட்டி மக்ரான் ஆகியோருக்கு இரவு விருந்து அளிக்கும் வேலையில் பரபரப்பாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஃபாக்ஸ் அண்டு பிரண்ட்ஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி மனைவிக்கு டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. டிரம்பின் இந்த தகவல் டுவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.