வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திடும் டிரம்ப் : டிவிட்டர் புகைப்படத்தால் பரபரப்பு

வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு வெற்றுப் பேப்பரில் கையெழுத்து இடுவது போல் டிவிட்டரில் வெளியான புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யும் ஒவ்வொரு செயலும் பரபரப்பை உண்டாகுவது வழக்கமான ஒன்றாகும். திடீர் அறிவிப்புக்கள் மற்றும் புகைப்படங்களை அவர் டிவிட்டரில் பதிவதால் ஒவ்வொரு முறையும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் அவர் டிவிட்டரில் வெளியிடுவதும் அதற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் எவ்வித ஒரு பதிலும் கூறாததும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சமீபத்தில் டிரம்ப் தனது டிவிட்டரில் அமெரிக்கப் பாராளுமன்றம் பல விவகாரங்களில் தம்முடன் ஒத்ஹ்டுழைப்பதில்லை எனவும் எதையும் நேரத்தில் முடிவு எடுப்பதில்லை எனவும் குறை கூறி இருந்தார். அதனால் தாம் இரவு முழுவதும் பல மசோதாக்களில் கையெழுத்து இடுவதாக ஒரு புகைப்படம் வெளியிட்டு இருந்தார். குறிப்பாக தாம் எல்லையில் ஒரு மிகப் பெரிய சுவர் அமைப்பதை அவை தடை செய்வதாக கூறி இருந்தார்.

அந்த புகைப்படத்தை பெரிதாக்கி பார்த்த நெட்டிசன்கள் அதிர்ந்து உள்ளனர். அந்தப் புகைப்படத்தில் அவர் கையெழுத்திடும் தாளில் எதுவும் எழுதப்படவில்லை என்பது போல் தெரிகிறது. வெற்றுப் பேப்பரில் கையெழுத்திட்டு விட்டு இவ்வாறு அங்கலாய்ப்பதாக அவரை நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அவர் உண்மையிலேயே வெற்று காகிதத்தில் கையெழுத்து இடுகிறாரா அல்லது புகைப்படத்தின் மீது விழுந்த வெளிச்சத்தினால் எழுத்துக்கள் தெரியவில்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை.