Random image

சஹாராவின் குறுக்கே சுவர் கட்ட ஸ்பெயினுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்:

ஐரோப்பாவின் சட்டவிரோத குடியேற்ற பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சஹாராவின் குறுக்கே சுவர் கட்டும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார் என்று ஸ்பெயின் வெளியுறவு துறை அமைச்சர் ஜோசப் போரெல் தெரிவித்தள்ளார்.

அமெரிக்கா-மெக்சிகோ இடையில் சுவர் கட்டப்படும் என்று டிரம்ப் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். டிரம்ப்-ஜோசப் போரெல் இடையிலான சந்திப்பு மாத்ரித்தில் இந்த வாரத்தில் நடந்தது.

சஹாராவுடனான எல்லை என்பது அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ எல்லையை விட பெரியது கிடையாது என்று பேச்சுவார்த்தையின் போது டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற முன்னாள் தலைவரான ஜோசப் போரெல்லுக்கு டிரம்பின் கருத்து மீது உடன்பாடில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லை என்பது 3,145 கி.மீ., ஆகும். சகாஹரா பாலைவனம் சுமார் 3 ஆயிரம் மைல் தூரத்தில் விரிந்து பறந்துள்ளது. ஸ்பெயினுக்கும் சஹாராவுக்கும் இடையே இறையாண்மை பிரச்னை எதுவும் இல்லை. எனினும் வடஆப்ரிக்கா கடற்கரையில் மொராக்கோவில் இருந்து சியூட்டா மற்றும் மெலிலா ஆகியவை கம்பி வேலி மூலம் பிரிந்து இருப்பதை ஸ்பெயின் பிரச்னையாக கருதுகிறது.

இந்த இரு பகுதிகளிலும் உள்ள மக்கள் நல்ல வாழ்க்கையை எதிர்பார்த்து ஐரோப்பாவுக்குள் குடியேறும் நிலை உள்ளது. கடந்த ஜனவரி வரை 35 ஆயிரம் அகதிகள் ஸ்பெயினுக்குள் வந்துள்ளனர். இது ஐரோப்பா யூனியனில் அதிக எண்ணிக்கையிலான அகதிகளாக கருதப்படுகிறது.