டிரம்ப் வருகை: தாஜ்மஹால் தீயணைப்பு வாகனத்தால் சுத்தம் செய்யப்படும் காட்சி….. வீடியோ

டெல்லி:

டிரம்ப் வருகை எதிரொலியாக,  தாஜ்மஹால் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஃபயர் எஞ்சின் வாகனத்தின் மூலம் நீரை பீய்ச்சி அடித்து, தாஜ்மஹால் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகறது.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தரும் டிரம்ப் தம்பதியினர் இன்று மாலை 5 மணி அளவில் தாஜ்மஹாலை பார்வையிட ஆக்ரா வருகின்றனர்.  இதையொட்டி ஆக்ரா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், தாஜ்மஹால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.  ஆக்ராவில் உள்ள தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு, தண்ணீர் பீய்ச்சியடித்து, தாஜ்மஹால் கோபுரங்கள் உள்பட அந்த பகுதிகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

தாஜ்மஹால் வரும் டிரம்ப் தம்பதிகள் அங்கு வசிக்கும் குரங்குகளால் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, தாஜ்மஹால் பகுதியில் டிரம்ப்பின் பாதுகாப்புக் குழுவில் ஐந்து நீண்ட சிஙக்வால் குரங்குகளும் பணியமர்த்தப்பட்டு உள்ளது. மேலும், டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரின் உள் பாதுகாப்பை அமெரிக்க ரகசிய படையினர் மேற்கொண்டு வருவதாகவும்,  மேலும், இந்திய அரசின்  துணை இராணுவப் படைகளின் 10 கம்பெனிகள், பிஏசி மற்றும் என்எஸ்ஜி கமாண்டோக்களின் 10 கம்பெனிகள்  வெளி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது.