நியூயார்க்:

மெரிக்ககா சீனா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தையில் எந்தவித ஒப்பந்தமும் போடப்படாத நிலையில், அமெரிக்காவின் அடுத்த அதிபர் நான்தான் என்றும், வர்த்தக் போனில் சீனா பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளர் டிரம்ப்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது முதலே, அவரது நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. பயங்கரவாத அமைப்புக்கு எதிராக  நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருவதால், உலக நாடுகள் டிரம்ப்மீது கடும் கோபத்தில் உள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான நிலை கொண்ட சீனாவை மிரட்டும் வகையில், சீன பொருட்களுக்கு  கூடுதல் வரி விதிக்கப்போவதாக  டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த ஆண்டு முதலே  இரு நாடுகளுக்கும் இடையில் தீவிரமான வர்த்தகப்போர் நடந்துகொண்டி ருக்கிறது. இதன் காரணமாக உலக பொருளாதார சந்தையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என கடந்த 2018ம்ஆண்டு அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடந்த, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தை அடுத்து, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் நடக்கும் முதல் அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை நடைபெற்றது. 2 நாள் நடைபெற்ற சந்திப்பில், அமெரிக்க நிதித் துணை அமைச்சர், டேவிட் மெல்பாஸும், சீன வர்த்தகத் துணை அமைச்சர் வாங் சியாவென்னும் சந்தித்துப் பேசினர்.

அதைத்தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்துப் பேசி இந்த வர்த்தகப் போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர். அத்துடன் இருநாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரு நாடுகளின் சார்பிலும்  உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைஅமெரிக்காவில் தொடங்கியது.  இந்த பேச்சு வார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை அதுபோல எந்தவிதமான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வில்லை.

இந்த நலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “அமெரிக்கா வுடன் இப்போதே வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துகொண்டால் உண்டு, இல்லையென்றால் 2020-ம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விடும்” என  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப்,  இரு நாடுகளுக்கும் இடையேயான  “வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை இழுத்தடிக்கலாம் என்று சீனா அரசு நினைக்கிறது. தேர்தலில் ஜனநாயகக் கட்சி வென்றால், அமெரிக்காவில் இருந்து, அதிகமான சலுகைகளை அனுபவித்துக்கொள்ளலாம் என அவர்கள் கனவுக்கோட்டை கட்டிக்கொண்டிருக் கிறார்கள். ஆனால், அது பலிக்காது. ஏனெனில், மீண்டும் நானேதான் ஜனாதிபதியாகப் போகிறேன். அப்போது ஒப்பந்தம் செய்தால் இன்னும் மிகமிக மோசமான விளைவுகளைச் சீனா சந்திக்க வேண்டியிருக்கும். அதனால், இப்போதே ஒப்பந்தம் செய்தால் அவர்களுக்கு நல்லது” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.