வாஷிங்டன்: அமெரிக்க நலன்களைப் பாதிக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாடு அரசியல் ரீதியாக அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

பாக்தாத்தில் அரசு அலுவலகங்கள் (அமெரிக்க அலுவலகம் உள்ளிட்ட) அமைந்துள்ள முக்கியப் பகுதியில், ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அமெரிக்காவை மீண்டும் பயமுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், ஈரான் அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது அமெரிக்கா.

இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் பங்களிப்பு இருக்குமென சந்தேகிக்கிறது அமெரிக்கா.

இந்தப் பதற்றத்தை தொடர்ந்து, வளைகுடாப் பகுதிக்கு விமானம் தாங்கி கப்பல் மற்றும் B-52 குண்டுவீச்சு விமானங்கள் போன்றவற்றை அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா.

அதேசமயம், ஈரான் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.