வாஷிங்டன்,

வடகொரியா பிரச்னை குறித்து ஜப்பான் பிரதமருடன் வரும் 17ம் தேதி டிரம்ப் ஆலோசனை மேற்கொள்கிறார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அமெரிக்காவை தாக்கி அழிக்கும் சக்தி வடகொரியா வசம் உள்ளது என்று அந்நாட்டு அதிபர் அறிவித்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.

சமீபத்தில் சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன், வடகொரியாவில் அமைதி ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு குறித்து, ஜப்பான் பிரதமரிடம் வரும் 17ம் தேதி டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார்.