பாகிஸ்தான் பிரதமர் இம்ரன் கானுக்கு அதிபர் டிரம்ப் கடிதம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதி உள்ளர். தாலிபான் தீவிரவாதிகளுடனான சமரச பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென டிரம்ப் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

trump

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக தொடர்ந்து அமெரிக்க குறைகூறிவந்த நிலையில் அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரன்கானுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், “ கடந்த 17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இருநாட்டிற்கும் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் பிராந்தியத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் இதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்காக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அவர்களுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு உதவி செய்ய வேண்டும் “ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அல்கொய்தா தலைவரான பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து துரோகம் செய்துவிட்டதாக கடந்த வாரம் டிரம்ப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.