வாஷிங்டன்

ற்போது அமெரிக்காவில் தீவிரமாகி வரும் கருப்பரின போராட்டத்துக்கு அதிபர் டிரம்ப் மகள் டிப்பனி டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் தேதி அன்று மினியாபாலிஸ் நகரில் கருப்பரினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அப்போது ஒரு காவல்துறை அதிகாரி ஜார்ஜ் கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அவர் மூச்சுத் திணறி மரணம் அடைந்தார்.

இதனால் நாடெங்கும் கடும் போராட்டம் வெடித்துள்ளது.   அமெரிக்க இனவெறியைக் கண்டு உலகமே அதிர்ச்சி அடைந்தது.

அமெரிக்க அதிபர்  டிரம்ப் போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்களைத் திருடர்கள் மற்றும் நாய்கள் எனவும் அவர் கூறியது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.   அமெரிக்காவில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆனால் அவருடைய இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸின் மகள் டிப்பனி டிரம்ப் தன் தந்தையின் கருத்துக்கு மாறாக கருப்பரின போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூகவலை தளங்களில் ஒரு கருப்பு நிற புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 26 வயது இளம்பெண்ணான டிப்பனி ட்ரம்ப் தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பின்னூட்டம் அளித்துள்ள பலர் டிரம்புக்கு இதைவிட வேறு அசிங்கம் தேவை இல்லை என விமர்சித்துள்ளனர்.