பிப்ரவரி மாதம் முதல் முறையாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருக்கும் ட்ரம்ப்!

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் இந்திய பயணத்தை பிப்ரவரியில் திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.  அவரது விஜயத்திற்கான பரஸ்பர சாதகமான தேதிகளைத் தெரிவு செய்ய இரு நாடுகளும் ஒன்றோடொன்று தொடர்பில் உள்ளன என்றும், அறியப்பட்டது.

டிரம்ப் மற்றும் மோடி நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தைத் தவிர சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அடையாளம் காணப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்து செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மிக மெதுவான பொருளாதார வளர்ச்சியையும், அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீதான அதிகரித்துவரும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டுள்ள இந்த சமயத்தில் ட்ரம்ப்பின் இந்திய விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.

இது கடந்த செப்டம்பர் மாதம்  நிகழ்ந்த மோடியின் அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. மோடி, தனது அமெரிக்கப் பயணத்தின்  போது, ஹூஸ்டனில் நடந்த ஒரு ‘ராக்‘ இசைக் கச்சேரியில் ட்ரம்ப்புடன் கைகோர்த்து நடந்தது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதட்டங்களைத் தணிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதே சமயம், டிரம்ப் கடந்த ஆண்டு புதுதில்லியில் இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கான அழைப்பை நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-