மோடியின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த டிரம்ப்!

--

வாஷிங்டன்: ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதன் மூலம் மோடியின் திட்டத்திற்கு ஆப்பு வைத்துள்ளார் அவரின் நண்பராக கூறப்படும் டொனால்ட் டிரம்ப்.

சீனாவில் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, அங்கு செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அவற்றை இந்தியாவிற்கு இழுத்து, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்த மோடி திட்டமிட்டு முயற்சிக்கிறார் என்ற அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து சொல்லி வந்தனர்.

இந்நிலையில், சீனாவில் செயல்படும் ஆப்பிள் உள்ளிட்ட பிற அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டிற்கேனும் சென்று, தங்களின் உற்பத்தியைத் தொடங்கினால், அந்நிறுவனங்களின் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என்ற ஒரு மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம், சீனாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க நிறுவனங்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், அவை மீண்டும் அமெரிக்காவிற்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், அவை இந்தியாவிற்கு வந்து தங்களின் செயல்பாடுகளைத் துவக்குவது கேள்விக்குறியாகியுள்ளது.

சமீபத்தில், இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் வருகை தந்தபோது, அந்நாட்டிற்கு சாதகமான ஒப்பந்தங்களிலேயே கையெழுத்திட்டு, தனது திறமையின்மையை நிரூபித்தார் மோடி.

தற்போது, இந்தப் புதிய அறிவிப்பின் மூலமும் மோடியின் ராஜதந்திரம் மீண்டும் ஒருமுறை பல்லிளித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மோடி குழுவினர் ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டம் பற்றி கூறிவந்தாலும், அது இதுவரை ஒரு காமெடி அம்சமாகத்தான் இருந்து வருகிறதே ஒழிய, உருப்படியான விஷயங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என்கின்றனர் விமர்சகர்கள்.