வாஷிங்டன்

நேற்று ஜார்ஜியா தேர்தல் வாக்கெடுப்பு முடிவில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கத் தலைநகரை முற்றுகை இட்டனர்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.  ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து வழக்குகளைத் தொடுத்து வந்தார்.  அனைத்து வழக்குகளிலும் அவர் தோல்வி அடைந்த நிலையில் சமீபத்தில் ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த தேர்தலை அவர் மிகவும் நம்பி இருந்தார்.,  ஆனால் அதிலும் அவர் கட்சி தோல்வியைச் சந்தித்து ஜோ பைடன் வெற்றி பெற்றதாக இறுதி சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஒன்று கூடி தலைநகரை முற்றுகை இட்டனர். அவர்கள் அங்குள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு கட்டிடத்தில் அத்துமீறி நுழைந்து ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.  இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவால் என கூறப்படும் வேளையில் தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மீது போராட்டக்காரர்கள் கவனம் திரும்பியது.

சமீபத்தில் ஜோ பைடன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட டிரம்புக்கு எதிராகத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது ஆர்பாட்டக்காரர்கள் கோபத்தில் இருந்துள்ளனர்.  அவர் காவல்துறையினர் உதவியுடன் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளார்.  நாடாளுமன்ற சபை வாசலில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் குவிந்துள்ளனர்.  மேலும் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கலவரத்தை தற்போது பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.    ஆயினும் கலவரத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மரணம் அடைந்த பெண் குறித்து எவ்வித தகவலும் இன்னும் தெளிவாக வெளியிடப்பட்டவில்லை.,