அதிரடி: கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி:

மீபத்தில் நடந்த சட்டபேரவை பொதுத்தேர்தலில்   40 சட்டமன்ற தொகுதிகள் உள்ள கோவாவில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன.இந்த நிலையில், எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் பாஜக, பிற கட்சிகளின் ஆதரவுடன் அரசமைக்கப்போவதாக உரிமை கோரியது. இதை ஏற்று  கவர்னரும் பாஜகவை ஆட்சி அமைக்க  அழைத்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்தது. இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்சநீதிமன்றம், கர்வனரின் முடிவை எதிர்த்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை உச்சநீதிமன்றம் சபாநாயகராக நியமிக்கும் என்றும் அவரது தலைமையில் கூடும் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய கோவா நிலவரம்:

ஏற்கெனவே தீர்மானித்தபடி மனோகர் பரிக்கர் தலைமையிலான அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்கிறது. அதே நேரம் நாளை மறுநாள் (16.03.17 – வியாழன்) காலை பதினோரு மணிக்கு பரிக்கர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published.