நீதிபதி லோயா மரண விவகாரம்: உண்மை ஒரு நாள் பிடிபடும்….ராகுல்காந்தி

டில்லி:

‘உண்மை ஒரு நாள் பிடிபடும்’ என்று லோயா மர்ம மரண விசாரணை தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘இந்தியர்கள் எப்போது அதி புத்திசாலிகள். பாஜக.வில் உள்ளவர்கள் உள்பட பெரும்பாலான உணர்வுள்ள இந்தியர்கள் அமித்ஷா குறித்த உண்மையை புரிந்துகொண்டுள்ளனர். இவரை போன்றவர்களை பிடித்து கொடுக்க உண்மை தனது சொந்த பாதையில் பயணிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்த தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி நேரடியாக கருத்து கூறாமல் சூசமாக டுவிட்டரில் அமித்ஷா குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.