பத்திரிகையாளர்களைச் சந்தியுங்கள்.. கேள்விகள் வேடிக்கையாக இருக்கும்!: மோடியை கிண்டல் செய்து ராகுல் ட்விட்

“மோடி பிரதமராக பதவியேற்று 1654 நாட்கள் ஆகியும் பிரதமர் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்தித்ததில்லை” என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “பத்திரிகையாளர்களைச் சந்தியுங்கள்.. கேள்விகள் வேடிக்கையாக இருக்கும்” என்று மோடியை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அந்த பதிவில், “ மோடி அவர்களே, தற்போது பிரசாரம் ஓய்ந்து விட்டது. இனியாவது உங்களின் பகுதி நேர வேலையான பிரதமர் பணியை செய்வீர்கள் என நம்புகிறேன். பிரதமராக பதவியேற்று 1654 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்தித்ததில்லையே? ஒருநாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு முயற்சித்துப்பாருங்கள். அப்போது கேட்கப்படும் கேள்விகள் வேடிக்கையானதாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். 

அத்துடன், ஐதராபாத்தில் தான் செய்தியாளர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்திருக்கிறார்.

#try #PressConference #Fun #Questions # RahulGandhi #PM