லக்னோ-

முத்தலாக் இஸ்லாமுக்கும்  குரானுக்கும் எதிரானது என யோகா சாமியார் ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் இன்று தொடங்கிய 3 நாள் யோகா மஹோட்சவ நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மதரீதியாக பெண்களுக்கு அநீதி இழைக்க கூடாது என்றும் சட்டத்தை மதிப்பவர்கள் முத்தலாக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.

இதேபோல் முத்தலாக் நடைமுறைக்கு ஆதரவாக புனித குரானை இழுப்பவர்கள் இஸ்லாத்தையும், குரானையும் அவமதிக்கிறார்கள் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யாநாத் ஆகிய இருவரும் யோகிகள் என்பது பெருமையாக உள்ளது என்று மகிழ்ச்சி  தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் ஆன்மிகத்துடன் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்ச்சி பெறும் என்றார் அவர்.

உத்தரபிரதேசம் ராமன், கிருஷ்ணன். சிவா ஆகிய தெய்வங்களின் பூமியாதலால் சரியான பாதையில் செல்லும் என்றும் ராம்தேவ் தெரிவித்தார்.