சிலைக்கடத்தல் ஐஜியாக அன்பு ஐபிஎஸ் நியமனம்! தமிழகஅரசு உத்தரவு

சென்னை:

சிலை கடத்தல் பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த 30ந்தேதியுடன் (நவம்பர் 30, 2019) முடிவடைந்த நிலையில், புதிய சிலைக்கடத்தல் பிரிவு ஐஜியாக அன்பு நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்து உள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அவர் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், புதிய  சிலைக்கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஐஜி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.​​

சென்னை காவல்துறையில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த டிஎஸ் அன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமித்து உள்துறைச் செயலாளர் அறிவித்து உள்ளார்.