சென்னை:

பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும், மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது  என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 12 மணிநேரம் விடாமல் கொட்டிய மழையால் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்திருக்கிறது. சுரங்கப்பாதை பாலங்களில் தண்ணீரி நிரம்பியிருப்பதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும், மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது  என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் “2015-ம் ஆண்டு ஏற்பட்ட அசம்பாவிதம் போல், தற்போது எதுவும் ஏற்படாது. மழை நின்ற 3 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பி விடும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர், துறைமுகம், கோட்டூர்புரம், அடையாறு மற்றும் வேளச்சேரி பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது