சென்னை:

சிறப்பு காவல்படைக்கு அனுப்பப்பட்ட உத்தரவு வழக்கமான நிகழ்வுதான் என்று டிஜிபி டிகே ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

சற்றுமுன் தமிழக டிஜிபி ராஜேந்திரன், மாவட்டங்களில் இருக்கும் சிறப்பு காவல்படையினருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில்,  அதில், “கீழே குறிப்பிடப்பட்டுள்ள காவல்படைப் பிரிவினர்களை உடனடியாக அந்தந்த படையின் தலைமை அலுவலகத்துக்கு குறிப்பிட்டுள்ள தேதிக்குள் பணிக்கு வருமாறு அனுப்பி வைக்கவும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது சில தொலைக்காட்சிகளில், மாவட்ட காவல் படைகளை உஷாராக இருக்கும்படி டிஜிபி உத்தரவு என்று பரபரப்பான செய்தியாக வெளியானது. இதையே மற்ற ஊடகங்களும் பின்பற்றி செய்தி வெளியிட்டன.

இதனால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. “ஏதும் துர்ச்சம்பவம் நடந்துவிட்டதா, மாநிலத்தில் குடியசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட போகிறதா” என்றெல்லாம் கேட்டு நெட்டிசன்கள் பதிவிட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் டிஜிபி ராஜேந்திரன், “இது ஒரு வழக்கமான நிகழ்வு தான் , தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “‘சிறப்பு காவல்படையினர் சிறப்புப் பணிகள் முடித்து முகாம்களுக்கு திரும்புவது வழக்கமான நடவடிக்கை” என்று அவர் தெரிவித்தார்.