இந்தோநேசியா எரிமலை வெடிப்பு : சுனாமியால் 43 பேர் மரணம்

ஜாவா

ந்தோநேசிய எரிமலை வெடித்ததால் சுனாமி உண்டகி அந்நாட்டின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் 43 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

File Photo

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்திய பெருங்கடலின் கிழுள்ள நில அடுக்கு தட்டுகள் நகர்ந்தன. இதனால் மாபெரும் சுனாமி உண்டாகியது. இதனால் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து 2,26,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த சுனாமியில் சிக்கி இந்தோநேசியாவில் 1,20,000 பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு சுமார் 9 மணிக்கு இந்தோநேசிய நாட்டு கடல் பகுதியில் அமைந்துள்ள அனக் கிரகடாவ் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்தது. இதனால் சுமார் 9.10 மணிக்கு மாபெரும் சுனாமி ஏற்பட்டுள்ளது. இந்த சுனாமியில் இந்தோநேசியா நாட்டில் உள்ள ஜாவா மற்றும் சுமத்ரா திவுகளில் சுமார் 43 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதைத் தவிர சுமார் 584 பேர் காயமடைந்துள்ளனர்.

சுனாமியால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள்ன. அந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. கட்டிடங்களில் ஏராளமானோர் உள்ள போது இடிந்து விழுந்துள்ளதால் மரணமானோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அங்குள்ள மக்கள் தங்கள் உறவினர்களில் பலர் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி