பசுபிக் தீவு நாடான பப்பூவா கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பசுபிக் தீவு நாடான பப்பூவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

earthquack

பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வலர்கள், “பசுபிக் தீவு நாடான பப்பூவா கீனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலி 7. 0 ஆக பதிவாகியது. இதனைத் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் குறிப்பாக ரபால் நகரத்தில் உணரப்பட்டது ” என்று தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.