திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா காரணமாக, மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் ஜூன் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால்  பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி தரப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் காலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.