ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்

சென்னை

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்கள் தகுதியைப் பரிசோதிக்கும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என விதி உள்ளது.

இவ்வாறு தேர்வில் கலந்து தேர்ச்சி பெறும் ஆசிரியர்களின் தேர்வு சான்றிதழ் தற்போது 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என விதிமுறை உள்ளது.

அதன்பிறகு ஆசிரியர்கள் மீண்டும் தேர்வு எழுதும் நிலை உள்ளது.

இதை மாற்றி அமைக்க வேண்டும் என அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று இனி ஒரு முறை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அந்த சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழையும் நீட்டிப்பு செய்யச் சட்ட ஆலோசனை நடைபெற உள்ளது