தமிழகம் : மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை

மாவட்ட வாரியான தமிழக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 25,872 ஆகி உள்ளது.

இன்று 11 பேர் மரணம் அடைந்து மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 208 ஆகி உள்ளது.

இன்று 610 பேர் குணமாகி இதுவரை 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதில் சென்னையில் முதல் முறையாகப் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து 1012 ஆகி உள்ளது.

சென்னையில் 17598 பேர் பாதிக்கப்பட்டு 158 பேர் உயிர் இழந்து 9034 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் 8405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1370 பேர் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிர் இழந்து 671 பேர் குணமடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1087 பேர் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிர் இழந்து 630 பேர் குணமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது திருப்பூர்,  நீலகிரி ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பின்றி உள்ளன.

கார்ட்டூன் கேலரி