சென்னை:

கோடநாடு தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கட்சி நிர்வாகிகளிடம் ஆவணங்களை பெற்று, ஜெயலலிதா கோடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதனை எடுக்க அவர்கள் சென்றதாகவும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இதில் தம்மை சம்பந்தப்படுத்தியதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.
செய்தி வெளியிட்டவர்கள் மீதும், பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக நேற்றே சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். வீடியோ வெளியீட்டில் அரசியல் பின்புலம் உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோடநாடு எஸ்டேட் சம்பவம் தொடர்பாக வெளிவந்துள்ள வீடியோ குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.