ப்போது தேனி தொகுதி என்று அழைக்கப்படும் அந்த தொகுதி முன்னர் பெரியகுளம் தொகுதியாக இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டை.

அங்கு தான் டி.டி.வி.தினகரனின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் (அப்போது பெரியகுளம் தொகுதி)அங்கு போட்டியிட்டு அமோக வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜே,எம்.ஆருண் ரசீத்திடம் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளர் பார்த்திபன் சுமார் ஐந்தே முக்கால் லட்சம் ஓட்டுகள் பெற்று தேனி தொகுதியில்  வெற்றி பெற்றார். தி.மு.க.ஜாம்பவான் பொன்.முத்துராமலிங்கம் இரண்டரை லட்சம் வாக்குகளே பெற முடிந்தது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அ.தி.மு.க.வென்றது.

நடைபெற விருக்கும் மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட வேண்டும் என்பது அவரது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரின் விருப்பமாக உள்ளது.

முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ள அந்த தொகுதியில் தினகரன்  நின்றால் எளிதில் வெல்லலாம் என்பது தொண்டர்கள் நம்பிக்கை.

ஆனால் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அவர் எம்.பி.தேர்தலில் நிற்க விரும்பவில்லை—

-பாப்பாங்குளம் பாரதி