சிறையில் சசிகலாவுடன் டிடிவி உள்பட முக்கிய ஆதரவாளர்கள் சந்திப்பு

பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பரன அக்ரஹார  சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அவரது உறவினரும், அமமுக கட்சி துணைப்பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து பேசினார்.

ஜெ. ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக திமுக தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. அதைத்தொடர்ந்து  பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த18 அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரால்  தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

அதையடுத்து காலியாக உள்ள  18 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அவருடன்  தகுதி நீக்கம் செய்ப்பட்ட எம்.எல்.ஏக்களான ரத்ன சபாபதி, செந்தில் பாலாஜி, வெற்றிவேல், வகைச்செல்வன் மற்றும் பழனியப்பன் ஆகியோரும் சந்தித்து பேசினார்.