அமமுக பதிவு செய்யப்பட்ட மாநில கட்சி: தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மாநில கட்சியாக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது.

சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அந்த கட்சியை மாநில கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டது.

கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு முன்பே முறையிடப்பட்டது. இந் நிலையில், தற்போது, அமமுகவை பதிவு செய்யப்பட்ட மாநில கட்சி என்று தலைமை தேர்தல் ஆணையம் அங்கீரித்து இருக்கிறது.

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருப்பார். அமமுக பதிவு செய்யப்பட்ட விவரங்களை நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டி கூறி இருக்கிறார்.