டில்லி போலீசார் சென்னையில் முகாம்! தினகரன் இன்று கைது?

சென்னை,

ரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி போலீசார் டிடிவி தினகரன்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதுகுறித்து விசாரணை நடத்த டில்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னை வந்து முகாமிட்டுள்ளனர். இன்று அவர்கள் தினகரனிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன்  சுகேஷ் சந்தர் என்பவர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக  கூறப்பட்டது. சுகேஷ்சந்தரிட்ம் இருந்து  1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது. இது தொடர்பான டிடிவி தினகரன்மீதும் எப்ஐஆர்  பதிவு செய்தது டில்லி போலீஸ்.

இதைத்தொடர்ந்து டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த, ஏ.சி.பி. சஞ்சய் ராவத் தலைமையில் டில்லி போலீசார் இன்று காலை சென்னை வந்தடைந்தனர்.

இன்று அவர்கள் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.  அதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று காலை 6 மணி முதலே சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

தினகரன் வெளிநாடு தப்பி ஓடிவிடாதபடி அனைத்து விமான நிலையங்களிலும் அலர்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.