ஜாமீன் கேட்டு டிடிவி தினகரன் டில்லி நீதிமன்றத்தில் மனு!

டில்லி,

ரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு காரணமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரன் ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இரட்டை இலைச் சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க, தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்க லஞ்சம் கொடுக்க  பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு பணம் கொடுத்த  புகாரின் அடிப்படையில் டில்லி போலீசாரால் டிடிவி தினகரனை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் டில்லி திகார்  சிறையில் அடைக்கப்பட்டார். அவரது காவல் வரும் 29ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜாமீன் கோரி டில்லி மாவட்ட நீதிமன்றத்தில்   டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. ஜாமின் கிடைக்குமா என்பது நாளை தெரிய வரும்,